ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் கட்டாய வெளியேற்றம்


ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் கட்டாய வெளியேற்றம்
x
தினத்தந்தி 22 Oct 2021 5:02 PM GMT (Updated: 22 Oct 2021 5:02 PM GMT)

ஆப்கானிஸ்தானில் மைனாரிட்டியாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி தலீபான்கள் வெளியேற்றி உள்ளனர்.


நியூயார்க்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஆகஸ்டு மத்தியில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றது.  இதனை தொடர்ந்து தலீபான் அமைப்புகள் ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இருந்து மைனாரிட்டியாக உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களை கட்டாயப்படுத்தி தலீபான்கள் வெளியேற்றி உள்ளனர்.

இதற்கு முன்பு ஆட்சி நடத்தியவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு தண்டனை வழங்கும் வகையில், இந்த வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதுபோன்று, வடக்கே பால்க் மாகாணம் மற்றும் தெற்கே ஹெல்மாண்ட் மாகாணம் பகுதிகளில் வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இதுதவிர, டெய்கண்டி, உரூஸ்கான் மற்றும் கந்தகார் மாகாணங்களில் இருந்தும் பலர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

கடந்த 8 மாதங்களில் 5 லட்சத்து 592 பேருக்கும் கூடுதலாக இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.


Next Story