உலக செய்திகள்

மெல்போர்ன்: 9 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு வாபஸ் + "||" + Melbourne, after 262 days in lockdown, celebrates a reopening.

மெல்போர்ன்: 9 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு வாபஸ்

மெல்போர்ன்: 9 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு வாபஸ்
கொரோனா பொதுமுடக்கம் விதிக்கப்பட்ட மெல்போர்ன் நகரில் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டது.
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அங்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது.

இருப்பினும் பல நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் 2-வது பெரிய நகரமான மெல்போர்ன் நகரில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

இடையில் அது விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், தொற்று மீண்டும் அதிகரித்ததால் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இவ்வாறு 9 மாதங்களாக பொது முடக்கம் நீடித்து வந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்களால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாததால், தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் கடுப்பான அவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து 262 நாட்களுக்கு பிறகு பொது முடக்கத்தை ரத்து செய்வதாக அரசு நேற்று இரவு அறிவித்தது. இதனையடுத்து மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

கொரோனாவால் சலூன்கள் மூடப்பட்டு இருந்ததால் பலரால் முடிதிருத்த முடியாமல் போனது. தற்போது பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து மக்கள் சலூன்களை நோக்கி படையடுத்தனர். இதனால் சலூன்களில் கூட்டம் அலைமோதியது. பல சலூன்களில் மக்கள் முன்பதிவு செய்த பின்னர் முடிதிருத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கேட்டு காங்கிரசின் ஆன்லைன் பிரசாரம்
இந்தியாவில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி ஆன்லைன் பிரசாரம் தொடங்கி உள்ளது.
2. கரூரில் 15 பேருக்கு கொரோனா
கரூரில் 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
3. தமிழ்நாட்டில் இன்று 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று புதிதாக மேலும் 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கரூரில் 12 பேருக்கு கொரோனா
கரூரில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 500-பேரைக் கண்டறிந்து பரிசோதனை
உலகை அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ இந்தியா வுக்குள் நுழைந்தது.