இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சிங்கப்பூர்


இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சிங்கப்பூர்
x
தினத்தந்தி 23 Oct 2021 5:54 PM GMT (Updated: 23 Oct 2021 5:54 PM GMT)

சிங்கப்பூர் அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த வகையில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்து வருகிறது. இதனால் அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வு வருகிற 27-ந்தேதி முதல் நடைமுறைக்‌கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மேற்கூறிய நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 10 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.


Next Story