இந்தியாவுக்கு எதிரான வெற்றி ‘இஸ்லாமின் வெற்றி’ - பாக். உள்துறை மந்திரி


இந்தியாவுக்கு எதிரான வெற்றி ‘இஸ்லாமின் வெற்றி’ - பாக். உள்துறை மந்திரி
x
தினத்தந்தி 25 Oct 2021 3:50 PM GMT (Updated: 25 Oct 2021 3:50 PM GMT)

பாகிஸ்தானின் இந்தியாவுக்கு எதிரான வெற்றி ‘இஸ்லாமின் வெற்றி’ என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

டி20 உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதளத்தில் இந்திய-பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பாகிஸ்தானின் இந்தியாவுக்கு எதிரான வெற்றி ‘இஸ்லாமின் வெற்றி’ என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் வெற்றிபெற்றது குறித்து அந்நாட்டு உள்துறை மந்திரி ஷேக் ரஷீத் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி என்பது ‘இஸ்லாமின் வெற்றி’. போட்டியின் போது இந்தியா உள்பட உலகெங்கும் உள்ள முஸ்லிம்களின் உணர்வு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனே இருந்தது. பாகிஸ்தானை பொறுத்தவரை இன்றைய (நேற்றைய) இந்தியா பாகிஸ்தான் போட்டியே இறுதிப்போட்டி’ என்றார்.



Next Story