கொரோனா தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் நோய்..! அதிபரின் சர்ச்சை பேச்சு!


கொரோனா தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் நோய்..! அதிபரின் சர்ச்சை பேச்சு!
x
தினத்தந்தி 26 Oct 2021 6:16 AM GMT (Updated: 26 Oct 2021 6:16 AM GMT)

தடுப்பூசி குறித்து தவறான தகவலை பரப்பிய பிரேசில் அதிபரின் வீடியோ பதிவு பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களில் இருந்து நீக்கப்பட்டது.

பிரேசிலியா, 

கொரோனா தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் நாடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மிகவும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றார்கள். இந்தியாவில் இதுவரை நூறு கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டால் எய்ட்ஸ் நோய் தாக்கும் என்று பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனோரா சர்ச்சை கருத்து ஒன்றை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசி  குறித்து பொய்யான தகவலை பரப்பியதைத்தொடர்ந்து, அது தொடர்பான வீடியோவை பேஸ் புக், யூடியூப் நிறுவனங்கள் நீக்கி உள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள பேஸ்புக் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி குறித்த தங்கள் கொள்கைகளுக்கு எதிராக இருந்ததால் பதிவு நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் மற்றும் தேவையற்ற வதந்திகளை பரப்பும் பதிவுகளை பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவை நீக்கி வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் நோய் தாக்கும் என்று பொய்யான தகவலை பேஸ்புக் மூலம் பரப்பிய பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனோராவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. 

Next Story