உலக செய்திகள்

சீனாவில் கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் பலி + "||" + 7 Dead, Including 5 Of Family, In Knife Attack In China's Wuhan: Police

சீனாவில் கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் பலி

சீனாவில் கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் பலி
சீனாவில் கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரின் புறநகர் பகுதியான காய்டியான் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர்.ஆனாலும் அந்த மர்ம நபர் அவர்களை விரட்டி சென்று கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இதனிடையே இந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்த ஒரு பாலத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்து தப்பினார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பியோடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் சீனா கடும் ஆட்சேபம்
இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என்று பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
2. போர்க்கப்பல் தயாரிப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது; மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்
சில பொறுப்பற்ற நாடுகள், கடல்சார் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தத்தை மீறுவதாக சீனாவை ராஜ்நாத்சிங் மறைமுகமாக சாடினார்.
3. காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... சீனாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை!
சீன டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. “சீனாவுடன் ஆரோக்கியமான போட்டியை மட்டுமே அமெரிக்கா எதிர்பார்க்கிறது” - ஜோ பைடன்
சீனாவுடன் ஆரோக்கியமான போட்டியை மட்டுமே அமெரிக்கா எதிர்பார்க்கிறது என ஜின்பிங்கிடம் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
5. ஜெர்மனியில் ஓடும் ரெயிலில் கத்திக்குத்து தாக்குதல்: 3 பேர் காயம்
ஜெர்மனியில் ரெயிலில் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் காயம் அடைந்தனர்.