ஜப்பான் இளவரசி காதல் திருமணம்; நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்பு பேரணி


ஜப்பான் இளவரசி காதல் திருமணம்; நூற்றுக்கணக்கானோர் எதிர்ப்பு பேரணி
x
தினத்தந்தி 26 Oct 2021 5:55 PM GMT (Updated: 26 Oct 2021 5:55 PM GMT)

ஜப்பான் இளவரசி மகோ மோசடி புகாரில் சிக்கிய பெண்மணியின் மகனை திருமணம் செய்ததை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றனர்.

டோக்கியோ

ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமான மகோ (வயது 29), கடந்த 2012-ம் ஆண்டு கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த கெய் கொமுரோ  (29) என்னும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞருடன் நட்பாக பழக ஆரம்பிக்க, பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதை தொடர்ந்து, 2017-ம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.

பல நூற்றாண்டுகளாக தொடரும் அரச வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும். காதலனை கைப்பற்றுவதற்காக தனது அரச பட்டத்தை துறந்ததுடன், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் பெண்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் 1.3 மில்லியன் அமெரிக்க டாலரயைும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியே 63 லட்சம்) நிராகரித்தார் மகோ.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நவம்பரில் தங்களின் திருமணம் நடைபெறும் என மகோ-கெய் கொமுரோ  ஜோடி அறிவித்த நிலையில், கெய் கொமுரோ தாயின் கடன் பிரச்சினையால் இந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கீ கோமுரோ தனது சட்டப்படிப்பை தொடர்வதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். 

இந்த நிலையில் மகோ-கெய் கொமுரோவின்  திருமணது கொண்டனர் இருவருக்கும் இடையே தற்போது திருமணம் நடைபெற்ற நிலையில் அரச குடும்பம், மோசடி புகாரில் சிக்கிய குடும்பத்துடன் சம்மதம் வைத்தததை கண்டித்து டோக்கியோவில் பேரணி நடைபெற்றது. தற்போது டோக்கியோவில் வசிக்கும் மகோ, விரைவில் பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்து கணவருடன் அமெரிக்காவின் நியூ யார்க் நகர் சென்று வசிக்க உள்ளார்.

Next Story