இந்து பாரம்பரிய மாதம் அக்டோபா்; அமெரிக்க இந்துக்கள் அறிவிப்பு


இந்து பாரம்பரிய மாதம் அக்டோபா்; அமெரிக்க இந்துக்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Oct 2021 12:25 AM GMT (Updated: 27 Oct 2021 12:25 AM GMT)

அக்டோபா் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட அமெரிக்க இந்துக்கள் முடிவு செய்துள்ளனா்.



நியூயார்க்,

அமெரிக்க இந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபா் மாதவாக்கில்தான் நவராத்திரி, தசரா, துா்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்றனா்.

எனவே, அமெரிக்காவில் இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட அக்டோபா்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று இந்து அமைப்பினா் முடிவு செய்தனா்.

யோகாசனத்திலிருந்து உணவு வரை, கொண்டாட்டம் முதல் கொடை வரை, நாட்டியத்திலிருந்து இசை வரை, அகிம்சை முதல் தத்துவாா்த்தம் வரை அமெரிக்காவின் அன்றாட வாழ்வியலில் இந்து மதம் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது.

அக்டோபா் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதை எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனா்.  இதற்கான அறிவிக்கையை 20 மாகாணங்கள் வெளியிட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story