உலக செய்திகள்

கனடா அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த பெண் அனிதா ஆனந்த் பதவியேற்பு...! + "||" + Indian-origin Canadian Anita Anand appointed Defence Minister in Trudeau

கனடா அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த பெண் அனிதா ஆனந்த் பதவியேற்பு...!

கனடா அமைச்சராக தமிழகத்தை சேர்ந்த பெண் அனிதா ஆனந்த் பதவியேற்பு...!
கனடாவின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒட்டாவா, 

அண்மையில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் 338 இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில் சிறு கட்சிகளின் ஆதரவோடு ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அடுத்து அவர் மீண்டும் பிரதமரானார். ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவையில் 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 
இந்நிலையில் கனடாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட  54 வயதான அனிதா ஆனந்த்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வழக்கறிஞரான அனிதா ஆனந்த், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்கள் ஆவர். 

பாதுகாப்புத்துறை அமைச்சராவதற்கு முன்பு அனிதா ஆனந்த், பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், இந்தியாவிலிருந்து கனடாவிற்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெறுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். முன்னதாக லிபரல் கட்சி சார்பில் ஒக்வில்லே தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் 46 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு
கனடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் மற்றும் அதனை தொடர்ந்து மழை, வெள்ளத்தால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2. காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் நோயாளி
கனடாவை சேர்ந்த 70 வயது பெண்மணி ஒருவர் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
3. கனடா பாதுகாப்புத்துறை மந்திரியாக அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - மு.க.ஸ்டாலின்
கனடாவின் பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்றுள்ள அனிதா ஆனந்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கனடாவில் 3-வது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தொடர்ந்து 3-வது முறையாக ஜஸ்டீன் ட்ரூடோ பிரதமராகிறார்.
5. கனடா நாட்டிற்கு நேரடி விமானம் இல்லாததால் 3 நாடுகளைக் கடந்து செல்ல வேண்டிய நிலை - பயணிகள் கவலை
கனடா நாட்டிற்கு நேரடி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெவ்வேறு இணைப்பு விமானங்களில் 3 நாடுகளைக் கடந்து கனடா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.