சிங்கப்பூரில் ‘அசாதாரணமாக உயர்ந்த’ கொரோனா பாதிப்பு...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

சிங்கப்பூர், 

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் முதல் அலை உருவானது. அதனையடுத்து உருமாறிய கொரோனா வைரஸ்கள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின. தீவிர கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு ஆகியவை மூலம் சில நாடுகள் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் வைத்து வருகின்றன. இந்த சூழலில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் கொரோனா பாதிப்பைப் பல காலமாகத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருந்தது. முதலில் தீவிரமான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்த அந்நாட்டு அரசு, அதன் பிறகு பைசர் வேக்சினை கொண்டு தடுப்பூசி பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்ததால், அங்கு தினசரி பாதிப்பு முதல்முறையாக 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.  நேற்று மட்டும் அங்கு மொத்தம் 5,324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டுவது இதுவே முதல்முறையாகும். வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. தற்போது சிங்கப்பூர் நாட்டில் உள்ள ஐசியு படுக்கைகளில் மொத்தம் 79.8% இடங்கள் நிரம்பியுள்ளன. இது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம் வரும் காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் அதைச் சமாளிக்கும் வகையில் கூடுதலாக 100 ஐசியு படுக்கைகள் அடுத்த வாரம் தயாராகிவிடும் என சிங்கப்பூர் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை என்பதால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

Next Story