“நண்பர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது” - பிரதமர் மோடி


“நண்பர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது” - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 30 Oct 2021 3:49 PM GMT (Updated: 2021-10-30T21:19:06+05:30)

ஜி-20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை இன்று பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

ரோம்,

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஜி-20 அமைப்பின் மாநாடு தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கல், துருக்கி அதிபர் எர்டோகன் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். 

இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் இருவரும் கலந்துரையாடினர். இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “எனது நண்பரான அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவர்களை ரோம் நகரில் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் நாங்கள் கலந்துரையாடினோம்” என்று பதிவிட்டுள்ளார். 


Next Story