இங்கிலாந்து: இரு ரெயில்கள் மோதல் - 17 பேர் படுகாயம்


இங்கிலாந்து: இரு ரெயில்கள் மோதல் - 17 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 1 Nov 2021 3:47 PM GMT (Updated: 2021-11-01T21:17:59+05:30)

இங்கிலாந்தில் இரு ரெயில்கள் மோதிய விபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லண்டன் வாட்டர்லூ ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் நேற்று இரவு சிலிஸ்பெரி நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்தது. 

லண்டன் ரோடு பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் ரெயில் சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருந்த மர்மப்பொருள் மீது விபத்துக்குள்ளானது. 

அப்போது, அதே சுரங்கப்பாதையில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த வெறொரு ரெயில் மீது இந்த ரெயில் மோதியது. சிக்னல் பிரச்சினை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரெயில் டிரைவர் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story