திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
x
தினத்தந்தி 2 Nov 2021 10:24 PM GMT (Updated: 2 Nov 2021 10:24 PM GMT)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. எனவே அன்று வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 

வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் இன்று (புதன்கிழமை) முதல் ஏற்கப்பட மாட்டாது. இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story