உலக செய்திகள்

மெக்சிகோ: சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு! + "||" + 19 dead,3 injured in Mexico road accident

மெக்சிகோ: சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோ:  சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதியதில் 19 பேர் உயிரிழப்பு!
மெக்சிகோவில் சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ,

மெக்சிகோவின் நகர் பகுதியை பியூப்லா மாநிலத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனத்தின் பிரேக்குகள் திடீரென செயலிழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அருகில் இருந்த சுங்கச்சாவடியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்  சுங்கச்சாவடியின் அருகில் இருந்த கார்கள் தீப்பிடித்து எரிந்தது. விபத்தால் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக  மீட்கப்பட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்த பயங்கர விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் நுழைந்தது புதிய வைரசான ‘புளோரோனா'..!!
மெக்சிகோவில் 3 பேருக்கு புதிய வைரசான புளோரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
2. எகிப்தில் பேருந்துகள் மோதி விபத்து: 14 பேர் பலி, 17 பேர் கடுகாயம்
எகிப்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் பலியாகினர்.
3. மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் மோதலில் 10 பேர் பலி!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது.
4. ஜார்க்கண்டில் பஸ் லாரி நேருக்கு நேர் மோதல்: 16 பேர் உயிரிழப்பு...!
கோவிந்த்பூர் - சாகிப்கஞ்ச் நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
5. சண்டிகர்: டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!
சண்டிகரில் டிராக்டர் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.