லிபியாவில் வெளியுறவுத்துறை மந்திரி திடீர் நீக்கம்...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Nov 2021 11:13 PM GMT (Updated: 8 Nov 2021 7:02 AM GMT)

லிபியாவில் வெளியுறவுத்துறை மந்திரி திடீரென நீக்கப்பட்டதுடன், வெளிநாடு செல்லவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கெய்ரோ, 

லிபியாவில் அதிபருக்கு பதிலாக 3 உறுப்பினர்களை கொண்ட கவுன்சில்தான் ஆட்சி அதிகாரத்தை கொண்டுள்ளது. அந்த நாட்டின் வெளியுறவு மந்திரியாக நஜ்லா மங்கூஷ் என்ற பெண் தலைவர் பதவி வகித்து வந்தார். அவர், வெளிநாட்டுக்கொள்கையில் ஏகபோக உரிமை எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஆளும் கவுன்சில் தெரிவித்துள்ளது.

அவர் மீதான விசாரணை நடந்து முடிகிறவரையில் அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்ன காரணத்துக்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை ஆளும் கவுன்சில் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கவில்லை. பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள மந்திரி நஜ்லா மங்கூசும் இதுபற்றி கருத்து எதுவும் வெளியிடவில்லை.



அந்த நாட்டில் இன்னும் 6 வாரங்களில் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வெளியுறவு மந்திரியின் இடைநீக்கம் தொடர்பாக லிபியாவின் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


Next Story