பிரான்சில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்!


பிரான்சில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்!
x
தினத்தந்தி 8 Nov 2021 4:33 PM GMT (Updated: 8 Nov 2021 4:33 PM GMT)

பிரான்ஸ் நாட்டில் 19 மீட்டர் நீளமுள்ள பின் திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

பாரிஸ்,

வடக்கு பிரான்சில் கலேஸ் துறைமுகத்தில் 15 டன் எடை கொண்ட  திமிங்கலமானது துடுப்பு பகுதியில் காயம் அடைந்த நிலையில் தானாக கரை பகுதிக்கு வந்தது. கரைக்கு வந்த பிறகு அது உயிரிழந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது அப்பகுதியில் ஒரு அரிய நிகழ்வு என்றும் கூறப்படுகிறது.

திமிங்கலத்தை வேறு பகுதிக்கு மாற்றம் செய்தால் மட்டுமே பிரேதப்பரிசோதனை மேற்கொள்ள முடியும் நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

நீல திமிங்கலத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பாலூட்டி இனமான இந்த பின் திமிங்கலமானது, தற்போது அழியும் நிலையில் உள்ள உயிரினமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story