சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற நாசாவின் 4 விண்வெளி வீரர்கள்


சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற நாசாவின் 4 விண்வெளி வீரர்கள்
x
தினத்தந்தி 11 Nov 2021 5:07 AM GMT (Updated: 11 Nov 2021 5:07 AM GMT)

நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றனர்.

புளோரிடா,

அமெரிக்கவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தனியார் நிறுவனமான ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையதிற்கு அனுப்பி உள்ளது.

இந்த பயணத்தில் ஒரு மூத்த விண்வெளி வீரர், எதிர்கால சந்திர பயணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு இளைய விண்வெளி வீரர்கள் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

இவர்களை கொண்டுசெல்லும் ராக்கெட்டானது புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் செலுத்தப்பட்டது. நான்கு விண்வெளி வீரர்களும் சுமார் 22 மணி நேர பயணத்தைத் தொடர்ந்து பூமியிலிருந்து சுமார் 250 மைல் (400 கிமீ) தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடைவர். புதிதாக செல்லும் நான்கு பேரும் 6 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து விண்வெளி ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என்று நாசா தெரிவித்துள்ளது.


Next Story