உலக செய்திகள்

நியூசிலாந்து பிரதமர், நாட்டுக்கு உரையாற்றியபோது திடீர் குறுக்கீடு... பின்னணி என்ன? + "||" + Well, that was a bedtime fail’: New Zealand PM Jacinda Ardern’s daughter crashes Facebook livestream

நியூசிலாந்து பிரதமர், நாட்டுக்கு உரையாற்றியபோது திடீர் குறுக்கீடு... பின்னணி என்ன?

நியூசிலாந்து பிரதமர், நாட்டுக்கு உரையாற்றியபோது திடீர் குறுக்கீடு... பின்னணி என்ன?
நியூசிலாந்து பிரதமர், நாட்டுக்கு உரையாற்றியபோது திடீர் குறுக்கீடு செய்யப்பட்டதன் சுவாரசிய பின்னணி வெளியாகி உள்ளது.
வெலிங்டன், 

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் என்ற பெண் தலைவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான போர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளம் நேரலையில் காட்டியது. பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு குறுக்கீடு வந்தது. அந்த குறுக்கீடு, எதிர்க்கட்சியினரிடம் இருந்தோ, கோபம் கொண்ட ஒரு குடிமகனிடம் இருந்தோ அல்ல. பிரதமரின் 3 வயது மகள் நெவ்விடம் இருந்துதான்.

பிரதமர் ஜெசிந்தா உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அவரது மகள் நெவ், ‘மம்மி’ என அழைத்தவாறு அங்கே வந்து விட்டாள். அதைக்கண்டு அதிர்ந்துபோனார், பிரதமர் ஜெசிந்தா. இருந்தாலும், “நீ படுக்கையில் அல்லவா இருக்க வேண்டும், டார்லிங்” என கூறி சமாளித்தார். தொடர்ந்து, “நீ படுக்கையில் இருக்க வேண்டும் டார்லிங். ஒரு வினாடியில் நான் வந்துவிடுகிறேன்” என கூறினார்.

தொடர்ந்து அவர் கேமராவைப் பார்த்து, “தூங்கும் நேரம் தவறி விட்டது இல்லையா?” என சிரித்து நாட்டு மக்களை சமாளித்தார்.

இதுபற்றிய செய்தி அறிந்த அனைவரும், நாட்டுக்கே பிரதமரானாலும், தன் குழந்தைக்கு அவர் தாய் அல்லவா என சிலாகித்துப்போயினர்.தொடர்புடைய செய்திகள்

1. ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது சட்டசபையில் கவர்னர் உரை
ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்று சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
2. முதல்-அமைச்சரை பாராட்டும் கவர்னரின் முதல் உரை
ஆண்டுதோறும் மாநில அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக கவர்னர் உரை இருக்கும். கவர்னர் உரையோடுதான் அந்த ஆண்டின் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும்.
3. இயற்கை விவசாய முறைக்கு மாறும் நேரம் வந்து விட்டது; பிரதமர் மோடி உரை
நம்முடைய சுற்றுச்சூழலை காக்க இயற்கை விவசாய முறைக்கு மாறும் நேரம் வந்து விட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4. அதிநவீன 4-வது நீர்மூழ்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். வேலா நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இந்திய கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் அதிநவீன 4-வது நீர்மூழ்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். வேலா நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
5. உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது; பிரதமர் மோடி உரை
உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என ஐ.நா. பொது சபையில் பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார்.