உலக செய்திகள்

ஜோ பைடன்-ஜின்பிங் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை + "||" + Biden, Xi set virtual summit for Monday to discuss tensions

ஜோ பைடன்-ஜின்பிங் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை

ஜோ பைடன்-ஜின்பிங் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் நாளை மறுநாள் காணொலி காட்சி வாயிலாக சந்தித்து பேசுகின்றனர்.
கீரியும், பாம்பையும் போல...

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா கீரியும், பாம்பையும் போல சண்டையிட்டு வருகிறது. முன்னேப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது.

கடுமையான மோதல் நிலவுகிறது

வர்த்தகம், கொரோனா வைரஸ் விவகாரம், உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், ஹாங்காங் மற்றும் தைவான் மீதான ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. எனினும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மோசமடைந்த உறவுகளை மேம்படுத்த ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகத்துக்கு சீனா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.

கருத்து வேறுபாடுகளை களைய தயார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்கா-சீனா உறவுகள் குறித்த தேசிய கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. அப்போது சீன அதிபர் ஜின்பிங் எழுதிய கடிதத்தை அமெரிக்காவுக்கான சீன தூதர் குயின் காங் வாசித்தார். அந்த கடிதத்தில் ஜின்பிங் “அமெரிக்காவுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய சீனா தயாராக உள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.

ஜோ பைடன்-ஜின்பிங் நாளை மறுநாள் சந்திப்பு

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் திங்கட்கிழமை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு காணொலி காட்சி வாயிலாக நடைபெற இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. சீனா வெளியுறவு அமைச்சகமும் இரு நாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பை உறுதி செய்துள்ளது.

இரு தரப்பு உறவுகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் தீவிரமாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி இந்த சந்திப்பு குறித்து கூறுகையில் “அமெரிக்க-சீன ஒப்பந்தத்தின்படி, ஜனாதிபதி ஜோ பைடனும் சீன அதிபர் ஜின்பிங்கும் நாளை மறுநாள்  மாலை காணொலி காட்சி வாயிலாக சந்தித்து பேசுகிறார்கள்” என கூறினார்.

மேலும் அவர் “அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கான வழிகள் மற்றும் நமது நலன்கள் இணையும் இடங்களில் ஒன்றாக செயல்படுவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள்” என்றார்.

பல்வேறு விவகாரங்களில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் சூழலில் இருநாட்டு தலைவர்கள் இடையே சந்திப்பு நடைபெறுவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் காணொலி காட்சி வாயிலாக சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவும் முதல் முறையாக காணொலி காட்சி வாயிலாக சந்தித்து பேசினர்.
2. உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும்: ஜோ பைடன் எச்சரிக்கை!
உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. முன்னெச்சரிக்கையை பின்பற்றினால் திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் கொண்டாடலாம் - ஜோ பைடன்
அமெரிக்காவில் 50 கோடி (500 மில்லியன்) பேருக்கு இலவசமாக கொரோனா விரைவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
4. புதின்-ஜின்பிங் சந்திப்பு: காணொலி காட்சி வாயிலாக நடந்தது
ரஷிய அதிபர் புதினுடன், சீன அதிபர் ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
5. இந்தியா - ரஷியா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா-ரஷியா இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ராணுவம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.