எகிப்தில் தேள் கொட்டியதால் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Nov 2021 1:33 AM GMT (Updated: 15 Nov 2021 1:33 AM GMT)

எகிப்தில் 500க்கும் மேற்பட்டோர் தேள் கொட்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெய்ரோ,

எகிப்து நாட்டில் அஸ்வான் மாகாணத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீடுகள், வாகனங்கள் மற்றும் விவசாய பண்ணைகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் தேள்கள், அவற்றின் வசிப்பிடங்களான துளைகளில் இருந்து வெளியேறி தெருக்களிலும், வீதிகளிலும் உலா வருகின்றன.

அங்கு இதுவரை 500-க்கும் மேற்பட்டோரை தேள் கடித்து விட்டதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி கலித் கபார் தெரிவித்துள்ளார். அவர்கள் தற்போது சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி வருவதாகவும் அவர் கூறினார், இந்த தேள்கள் கடித்து 3 பேர் உயிரிழந்து இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.


Next Story