உலக செய்திகள்

மாலியில் பயங்கரவாத தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு + "||" + Terrorist attack in Mali; 4 soldiers killed

மாலியில் பயங்கரவாத தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

மாலியில் பயங்கரவாத தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
மாலி நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.


பமாகோ,

மாலி நாட்டின் தென்மேற்கே கவுலிகொரோ பகுதியில் ராணுவ சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது.  இதில், வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  இந்த நிலையில், சாவடி மீது பயங்கரவாத கும்பல் ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் அந்நாட்டு ஆயுத படையை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  14 பேர் காயமடைந்து உள்ளனர்.  இதனை அரசு படைகள் உறுதிப்படுத்தி உள்ளன.  இந்த தாக்குதலில் காயமடைந்த 3 ராணுவ வீரர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் சம்பவ பகுதியில் இருந்து மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  இதேபோன்று, ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகளில் 6 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பொக்லைன் ஆபரேட்டரை தாக்கிய 3 பேர் கைது
அரவக்குறிச்சி அருகே பொக்லைன் ஆபரேட்டரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. வத்திராயிருப்பு பகுதிகளில் நெற்பயிரில் நோய் தாக்குதல்
வத்திராயிருப்பு பகுதிகளில் நெற்பயிரில் நோய் தாக்கம் குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
3. விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. காங்கோ நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல்; 8 சீனர்கள் கடத்தல்
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல் நடத்தி 8 சீனர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
5. வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது
குளித்தலை அருகே வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.