ஹைதி நாட்டில் அதிபர் கொலை வழக்கில் கைதானவர் கொரோனாவில் உயிரிழப்பு


ஹைதி நாட்டில் அதிபர் கொலை வழக்கில் கைதானவர் கொரோனாவில் உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 9:52 PM GMT (Updated: 18 Nov 2021 9:52 PM GMT)

ஹைதி நாட்டின் முன்னாள் அதிபர் ஜோவேனல் மொய்ஸ் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

போர்ட் ஆ பிரின்ஸ்,

ஹைதி நாட்டின் அதிபராக இருந்தவர் ஜோவேனல் மொய்ஸ் (வயது53). இவர் கடந்த ஜூலை மாதம் 7-ந்தேதி வீட்டில் இருந்தபோது, சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது, அவரது மனைவி மார்ட்டின் காயங்களுடன் உயிர் தப்பினார்.

அதிபரின் கொலை, அந்த நாட்டை உலுக்கியது. இது தொடர்பான வழக்கில் 40-க்கும் மேற்பட்டோர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேர் கொலம்பியா நாட்டினர், 5 பேர் அமெரிக்க நாட்டினர், 4 பேர் போலீஸ் அதிகாரிகள் ஆவார்கள்.

இந்த வழக்கில் கைதானவர்களில் ஒருவர் கில்பர்ட் டிராகன். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த நிலையில், போர்ட் ஆ பிரின்ஸ் நகர ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story