உலக செய்திகள்

பாலத்தில் தொங்கிய நிலையில் 9 உடல்கள் ;போதைக்கும்பலின் அட்டகாசம் + "||" + 10 bodies, 9 hanging from bridge, found in Mexico; gang violence blamed

பாலத்தில் தொங்கிய நிலையில் 9 உடல்கள் ;போதைக்கும்பலின் அட்டகாசம்

பாலத்தில் தொங்கிய நிலையில் 9 உடல்கள் ;போதைக்கும்பலின் அட்டகாசம்
போதைப்பொருள் விற்பனை விவாரத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
மெக்சிகோ,

மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் சில சமயங்களில் தங்கள் எதிரிகளுடன் மோதிக்கொள்ளும்போது உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

 அதன் தொடர்ச்சியாக அந்நாட்டில்  தற்போது பாலத்தில் தொங்கியபடி 9 ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஒருவரது உடல் அருகிலுள்ள நெடுஞ்சாலையில் கண்டெடுக்கப்பட்டதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இக்கொலைகள் அப்பகுதியில் செயல்படும் கிரிமினல் கும்பல்களுக்கு இடையிலான தகராறுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அரசு அதிகாரி ஒருவர்  கூறினார். இதுகுறித்து "தீவிர விசாரணை" நடந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்த ஆண்டு கும்பல் தொடர்பான வன்முறையால் மொத்தம் 21,495 பேர் இறந்துள்ளனர், இதில் சராசரியாக மாதத்திற்கு 2,400 பேர் உயிரிழக்கின்றனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் நுழைந்தது புதிய வைரசான ‘புளோரோனா'..!!
மெக்சிகோவில் 3 பேருக்கு புதிய வைரசான புளோரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
2. மெக்சிகோ: போதைப்பொருள் கும்பல் மோதலில் 10 பேர் பலி!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வருகிறது.
3. துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல் - கினியா நாட்டு பெண் டெல்லியில் கைது
அவரது பைகளில் ரூ.72 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
4. டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய 14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்: உகாண்டா பெண் கைது
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த உகாண்டா பெண் கைதுசெய்யப்பட்டார்.
5. மெக்சிகோ: சரக்குலாரி விபத்தில் 53 புலம்பெயர்ந்தோர் பலியான சோகம்
மெக்சிகோவில் சரக்குலாரி விபத்துக்குள்ளானதில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.