கொரோனா அதிகரிப்பால் ஆஸ்திரியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 19 Nov 2021 1:33 PM GMT (Updated: 19 Nov 2021 1:33 PM GMT)

ஆஸ்திரியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

வியன்னா:

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதில் ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரியாவிலும் பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. 

ஆஸ்திரியாவில் இதுவரை 4 அலைகளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஐந்தாவது அலையும் உருவாகலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, தடுப்பூசி போடாத மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய் தொற்று ஏற்படலாம் என கருதப்படும் பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஆஸ்திரியா பிரதமர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார். 

இந்த ஊரடங்கு குறைந்தது 10 நாட்கள் நீடிக்கும் என்றும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

Next Story