உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்ட வெளிநாட்டினருக்கு டிசம்பர் 1-ந்தேதி முதல் அனுமதி...! + "||" + Australia To Allow Entry Of Fully Vaccinated Visa Holders From December 1

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்ட வெளிநாட்டினருக்கு டிசம்பர் 1-ந்தேதி முதல் அனுமதி...!

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போட்ட வெளிநாட்டினருக்கு டிசம்பர் 1-ந்தேதி முதல் அனுமதி...!
டிசம்பர் 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட்ட வெளிநாட்டினருக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
கான்பெர்ரா, 

முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டினர் தகுதியான விசா வைத்திருந்தால் அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் ஆஸ்திரேலியா வரலாம் என அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

டிசம்பர் 1-ந் தேதி முதல், முழுமையாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள், ஆஸ்திரேலியாவுக்குள் தடையின்றி வரலாம். விலக்கு கோரி தனியாக விண்ணிப்பிக்கத் தேவையில்லை.

மாணவர்கள், தொழிலாளர்கள், மனிதநேய ஆர்வலர்கள், விடுமுறைக்கு வரும் பயணிகள், குடும்பத்துடன் வருவோர் அனைவரும் தகுதியான விசா வைத்திருத்தல் போதுமானது.

ஆஸ்திரேலிய மருந்து நிர்வாக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும். விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது தடுப்பூசி சான்றிதழ், பயணத்துக்கு 3 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு மாவட்டத்தில் 89 சதவீதம் பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி; சுகாதார துறையினர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 89 சதவீதம் பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார துறையினர் கூறியுள்ளனா்.
2. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே கொரோனா பாதிப்பில் உயிரிழக்கின்றனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் பின்விளைவுகள் ஏற்பட்டு உள்ளது என்ற எந்த புகாரும் வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3. டோங்காவுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆஸ்திரேலியா
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பேரழிவை சந்தித்த டோங்கா நாட்டுக்கு ஆஸ்திரேலியா நிவாரண பொருட்கள் வழங்கியது.
4. 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது: தமிழகத்தில் இன்று 19-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது: தமிழகத்தில் இன்று 19-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்.
5. ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 503 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.