உலக செய்திகள்

ஜெர்மனி, டென்மார்க் நாடுகளுக்கு செல்ல அமெரிக்கா தடை..! + "||" + US issues 'Do Not Travel' warning for Germany, Denmark amid rising COVID-19 cases

ஜெர்மனி, டென்மார்க் நாடுகளுக்கு செல்ல அமெரிக்கா தடை..!

ஜெர்மனி, டென்மார்க் நாடுகளுக்கு செல்ல அமெரிக்கா தடை..!
கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஜெர்மனி மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஐரோப்பிய நாடுகளான  டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு அமெரிக்கர்கள் பயணிக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் கொரோனா கால பயணத்தில் நான்காம் எண் எச்சரிக்கை நிலை கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த இரு நாடுகளும் கொரோனா பரவலில் மிகவும் அபாயம் எனும் நிலையில் உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அபாய பிரிவில் ஆஸ்திரியா, இங்கிலாந்து, பெல்ஜியம், கிரீஸ், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து செக் குடியரசு, ரோமானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் உள்ளன.

இந்நிலையில், ஜெர்மனி நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல், கொரோனாவை கட்டுப்படுத்த  போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும், அண்டை நாடான ஆஸ்திரியாவில் முழுமையான பொதுமுடக்கம் நேற்றிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெர்மனியிலும் பொதுமுடக்கம் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தொற்று பரவலின் எண்ணிக்கையை பொறுத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு; ஒரே நாளில் 1,066 பேருக்கு கொரோனா- சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,509 ஆக உயர்ந்தது
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 1,066 பேருக்கு கொரோனா உறுதியானது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 509 ஆக உயர்ந்தது.
3. 529 பேருக்கு கொரோனா
529 பேருக்கு கொரோனா
4. இன்ஸ்பெக்டர், 4 டாக்டர்கள் உள்பட 587 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர், 4 டாக்டர்கள் உள்பட 587 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு இளம்பெண் சாவு; பலி எண்ணிக்கை 422 ஆக உயர்ந்தது
புதுக்கோட்டையில் 244 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும், இளம்பெண் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 422 ஆக உயர்ந்தது.