உலக செய்திகள்

19 வது மாடியில் தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி + "||" + An 82-year-old woman was seen dangling upside down from a clothes rack

19 வது மாடியில் தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி

19 வது மாடியில் தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி
19 வது மாடியில் இருந்து தலைகீழாக தொங்கிய 82 வயது பாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார்.
ஜியாங்கு,

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்கு மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த 82 வயது பெண்மணி ஒருவர் 19 வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். அவர் அதிர்ஷ்டவசமாக 18வது மாடியில் இருக்கும் துணியை காயப்போடும் ரேக்கில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தார். அவருடைய கால்கள் 18வது மாடியிலும், உடல் பகுதி 17வது மாடியிலும் இருந்தன.

இதனையடுத்து இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பெண்மணியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்டனர். நல்ல வேளையாக இதில் பெண்மணிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. ஒமைக்ரான் பரவல்: 1.40 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் சீனா
ஒமைக்ரான் பரவல் அச்சுருத்தல் காரணமாக சுமார் 1.40 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீனா முடிவு செய்துள்ளது.
2. ‘ஏரியில் பாலம் கட்டும் இடம் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது’ - மத்திய அரசு தகவல்
ஏரியில் பாலம் கட்டும் இடம், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. டென்னிஸ் வீராங்கனை விவகாரம்: ‘வேண்டுமென்றே பெரிதுபடுத்தப்பட்டது’ - சீனா காட்டம்!
சீன டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய் தொலைந்து போனதாக எழுந்த குற்றச்சாட்டில் சீனா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
4. பணக்கார நாடுகள் பட்டியல் - அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம்!
உலக பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.
5. 2025-க்குள் சீனா முழுமையாக படையெடுக்கும்: தைவான் அச்சம்
2025-க்குள் சீனா முழுமையாக படையெடுக்கும் என்று தைவான் அச்சம் தெரிவித்துள்ளது.