உலக செய்திகள்

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சோகம் + "||" + Six people killed, 3 injured in road accident in NW Pakistan

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சோகம்

பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 6 பேர் பலி; திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சோகம்
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கோஷிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சாலையில் இன்று கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரேகுடும்பத்தை சேர்ந்த 9 பேர் அந்த காரில் பயணம் செய்தனர்.

லோட்டர் என்ற பகுதியில் உள்ள மலைப்பாங்கான சாலையில் வேகமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த குழந்தை, பெண் உள்பட 6 பேர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அடித்து, உதைத்த வக்கீல்கள்
பாகிஸ்தான் கோர்ட்டில் ஆளும் கட்சி பெண் தலைவரை அங்கிருந்த வக்கீல்கள் அடித்து, உதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
2. பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு: பழங்குடியின தலைவர் உள்பட 4 பேர் பலி
பாகிஸ்தானில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடில் பழங்குடியின தலைவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. வங்காளதேசத்துக்கு எதிரான டி20 போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி
வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
4. வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் : பாகிஸ்தான் அணி வெற்றி
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது
5. பயங்கரவாதம் வளர பள்ளி, கல்லூரிகளே காரணம் - பாக். மந்திரி சர்ச்சை பேச்சு
பயங்கரவாதம் வளர மதப்பள்ளிகள் (மதராசா) காரணம் அல்ல என்று பாகிஸ்தான் மந்திரி தெரிவித்துள்ளார்.