உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி + "||" + 2 policemen killed in Peshawar firing

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலி
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டதில் 2 போலீசார் பலியாகினர்.
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அந்த மாகாணத்தின் தலைநகர் பெஷாவர் நகரில் உள்ள ஹயாதாபாத் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் போலீசார் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதை தொடர்ந்து பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றது மறக்கமுடியாதது: ஷாஹீன் அப்ரிடி
கே.எல்.ராகுலுக்கு பந்து வீசியபோது, அது சிறந்த பந்தாக இருக்கும் என்று நான் கூட எதிர்பார்க்கவில்லை.
2. பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்!
பாகிஸ்தான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்.
3. காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பறந்து வந்த பலூன்
ல்லை தாண்டும் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பாகிஸ்தான், இதுபோன்று தங்கள் நாட்டு கொடியுடன் இந்திய பகுதிக்குள் பலூன்களை அனுப்புவது வழக்கமாக உள்ளது
4. பாகிஸ்தானில் மோர்டார் குண்டுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் பழைய மோர்டார் ரக குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது.
5. பாகிஸ்தான்: நபிகள் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.