உலக செய்திகள்

சோமாலியா: பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குல் - 5 பேர் பலி + "||" + Huge explosion rocks Somali capital Mogadishu: Witnesses

சோமாலியா: பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குல் - 5 பேர் பலி

சோமாலியா: பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குல் - 5 பேர் பலி
சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
மொகடிசு,

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. 

இதன் காரணமாக அரசுப்படைகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் மொகடிசுயில் உள்ள கே4 சந்திப்பு அருகே இன்று உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டுவந்த பயங்கரவாதி அதை வெடிக்கச்செய்தான். மேலும், அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்திற்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா திரையீடு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா, உள்நாட்டுப்போரிலும், வறுமையின் பிடியிலும் சிக்கித்தவிக்கிறது. இங்கு உள்நாட்டுப்போர் தொடங்கியதும் 1991-ல் திரையரங்குகள் மூடப்பட்டன.
2. சோமாலியாவில் அரசியல் நெருக்கடி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை
சோமாலியாவின் அரசியல் நெருக்கடி குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனை நடத்தியது.
3. சோமாலியா: பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 2 பேர் பலி
சோமாலியாவில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
4. சோமாலியா: கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து 5 பேர் பலி
சோமாலியா நாட்டில் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
5. சோமாலியாவில் குண்டு வெடிப்பு: கால்பந்து வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு
சோமாலியாவில் கிளப் அணிகளுக்காக விளையாடும் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.