உலக செய்திகள்

புகழ்பெற்ற பச்சைக் கண்கள் ஆப்கான் அகதி பெண் இத்தாலியில் தஞ்சம் + "||" + Nat Geo Green-Eyed Girl Most Famous Afghanistan Refugee Now In Italy

புகழ்பெற்ற பச்சைக் கண்கள் ஆப்கான் அகதி பெண் இத்தாலியில் தஞ்சம்

புகழ்பெற்ற பச்சைக் கண்கள் ஆப்கான் அகதி பெண் இத்தாலியில் தஞ்சம்
ஷர்பத் குல்லா 1984 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அகதிப் பெண்ணாக சர்வதேசப் புகழ் பெற்றார்.
ரோம்

1985 ஆம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் இதழின் அட்டை படத்தில் இடம் பெற்று புகழ்பெற்ற பச்சைக் கண்கள் கொண்ட “ஆப்கன் பெண்” ஷர்பத் குல்லா . தற்போது இவர் இத்தாலியில் தஞ்சம் அடைந்துள்ளார். 

ஆகஸ்ட் 15 ந்தேதி தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை தொடர்ந்து  மேற்கு நாடுகள் அங்கு தஞ்சம் அடைந்துள்ள  ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அந்த பச்சைக்கண்  “ஆப்கன் பெண்” இத்தாலிக்கு வந்துள்ளார். இதனை  இத்தாலிய  பிரதமர் மரியோ டிராகியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குல்லா 1984 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அகதிப் பெண்ணாக சர்வதேசப் புகழ் பெற்றார், புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கரியின் புகைப்படம், பச்சை நிறக் கண்களுடன், நேஷனல் ஜியோகிராபிக்  இதழின் அட்டை பக்கத்தில் வெளியிடப்பட்டது. 

2014 ஆம் ஆண்டில், குல்லா பாகிஸ்தானில் இருந்தார். ஆனால் அவர் போலி பாகிஸ்தான் அடையாள அட்டையை வாங்கியதாக அதிகாரிகள் குற்றம் சாட்டி, அவரை நாடு கடத்த உத்தரவிட்டபோது தலைமறைவானார். அவர் காபூலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு ஜனாதிபதி அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளித்தார் மேலும் அவருக்கு வசிக்க ஒரு அரசு குடியிருப்பு  வழங்கினார்.

ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறி தலீபான்கள்  ஆப்கானிஸ்தானை கைபற்றியதை தொடர்ந்து ஆயிரகணக்கான ஆப்கானியர்களை விமானம் மூலம் நாட்டிலிருந்து வெளியேறி பல மேற்கத்திய நாடுகளில்  தஞ்சம் அடைந்தனர். அதில் இத்தாலியும் ஒன்றாகும்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் விரிவடைவதை தடுக்க வேண்டும்: ஐ.நா
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் விரிவடைவதை தடுக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ கட்டர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. ஆப்கானிஸ்தானில் அனைத்து வகுப்பு மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அனுமதி - தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் மார்ச் 21 முதல் அனைத்து மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
3. ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: 42 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம் ; நார்வேயிடம் தலீபான்கள் பேச்சுவார்த்தை
கடும் பஞ்சத்தால் ஆப்கானிஸ்தான் தத்தளிக்கும் நிலையில், தங்களுக்கு உதவுமாறு நார்வே நாட்டிடம் தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
5. நெதர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள்: 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி
நெதர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.