ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு 30 ஆண்டுகள் சிறை


ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு 30 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 26 Nov 2021 12:38 PM GMT (Updated: 26 Nov 2021 12:53 PM GMT)

ஊழல் வழக்கில் பிரேசில் முன்னாள் ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

ரியோ டி ஜெனிரோ

20 ஆண்டுகளுக்கும்  மேலாக பிரேசில்  ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்து வருபவர் கார்லோஸ் ஆர்தர் நுஸ்மான், 

அவர் மீது 2016 ஒலிம்பிக் போட்டியை க ரியோ டி ஜெனிரோவில் நடத்த  வாக்குகளை வாங்க ஊழல் செய்ததாக  குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 30 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்கள் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதிபதி மார்செலோ பிரேடாஸ் வழங்கிய தீர்ப்பு நேற்று  வெளியானது.

இருப்பினும், 79 வயதான அவரது அனைத்து மேல்முறையீடுகளும் விசாரிக்கப்படும் வரை சிறையில் அடைக்கப்பட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவரும் அவரது வழக்கறிஞரும் இந்த முடிவு குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.


Next Story