உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.3 ஆக பதிவு + "||" + Earthquake in Afghanistan Recorded as Richter 4.3

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.3 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று ரிக்டர் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
காபுல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் இன்று காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் 4.3 அளவில் பதிவாகி இருந்ததாக ஆப்கானிஸ்தான் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இருந்து 316 கி.மீ. தெற்கில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் விரிவடைவதை தடுக்க வேண்டும்: ஐ.நா
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் விரிவடைவதை தடுக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ கட்டர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. ஆப்கானிஸ்தானில் அனைத்து வகுப்பு மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அனுமதி - தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் மார்ச் 21 முதல் அனைத்து மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
3. ஹைதியில் கடுமையான நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 வீடுகள் தரைமட்டம்
ஹைதியில் 5.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 2 பேர் உயிரிழந்தனர்.
4. ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: 42 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம் ; நார்வேயிடம் தலீபான்கள் பேச்சுவார்த்தை
கடும் பஞ்சத்தால் ஆப்கானிஸ்தான் தத்தளிக்கும் நிலையில், தங்களுக்கு உதவுமாறு நார்வே நாட்டிடம் தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.