உலக செய்திகள்

‘புதிய வகை கொரோனா பேரழிவு ஏற்படுத்தாது’ - இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து + "||" + New corona variant will not cause disaster UK scientist comments

‘புதிய வகை கொரோனா பேரழிவு ஏற்படுத்தாது’ - இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து

‘புதிய வகை கொரோனா பேரழிவு ஏற்படுத்தாது’ - இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து
புதிய வகை கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தாது என இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார்.
லண்டன்,

புதிய வகை கொரோனா ஒமிக்ரான், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற வேளையில், அது பேரழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “இது பேரழிவை ஏற்படுத்தாது. எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன்” என குறிப்பிட்டார்.

“தடுப்பூசியால் கிடைக்கிற நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும். ஜலதோஷம், தலைவலி ஏற்படலாம். இதற்காக ஆஸ்பத்திரிக்கு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருகிற வாய்ப்பு அல்லது இறக்கிற வாய்ப்பு தடுப்பூசியால் வெகுவாக குறைந்து விட்டது” எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை: தென்ஆப்பிரிக்க பயணிகளுக்கு கட்டாய தனிமை - மாநகராட்சி அறிவிப்பு
புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு உள்ள தென்ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மேயர் கிஷோரி பெட்னேகர் அறிவித்து உள்ளார்.
2. புதிய வகை கொரோனா: தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது இலங்கை
புதிய வகை கொரோனா பரவல் காரணமாக தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலங்கை பயணத்தடை விதித்துள்ளது.