உலக செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? - உலக சுகாதார அமைப்பு விளக்கம் + "||" + Not yet clear if Omicron more transmissible, causes severe disease, says WHO

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? - உலக சுகாதார அமைப்பு விளக்கம்
ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
வாஷிங்டன்,

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் தென் ஆப்பிரிக்கா உள்பட ஆப்பிரிக்க நாடுகளுடனான விமானப்போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. 

அதேவேளை தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.  

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடுமா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. 

அதேபோல், வேகமாகப்பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா மற்றும் பிற வகை கொரோனா வைரசுடன் ஒப்பிடும் போது இந்த ஒமிக்ரான் வைரஸ் அதிக வேகமாக பரவும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இதுவரை எந்தவித தரவுகளும் இல்லை. 

ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஒமிக்ரான் வகை வைரசுக்கான அறிகுறிகள் பிற வைரசுகளின் அறிகுறிகளுடன் மாற்றுபட்டவை என்பதை உறுதி செய்ய எந்த வித தகவல்களும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மத்தியபிரதேசத்தில் மேலும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மத்தியபிரதேசத்தில் மாநிலத்தில் மேலும் 9 ஆயிரம் 966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் மளமளவென குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28.16 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.47 கோடியாக அதிகரித்துள்ளது.
4. இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27.96 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.19 கோடியாக அதிகரித்துள்ளது.