உலக செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியது - ஜோ பைடன் + "||" + Omicron variant is a cause for concern US President Joe Biden

ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியது - ஜோ பைடன்

ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியது - ஜோ பைடன்
ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே தவிர மக்கள் பீதியடைய காரணமல்ல என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்  முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது. ஒமிக்ரான் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் கவலைக்குரியதே என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நேற்று வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், ஒமிக்ரான் வைரஸ் திரிபு கவலைக்குரியதே... அதேவேளை இது மக்கள் பீதியடைய காரணமல்ல. 

முழு முடக்கம், ஊரடங்கு போன்றவை இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரித்தல், பூஸ்டர் டோஸ், பரிசோதனை உள்ளிட்டவற்றவை அதிகரிப்பதன் மூலம் குளிர்காலத்தில் நாம் எவ்வாறு இந்த வைரசுக்கு எதிராக போராட உள்ளோம் என்பது குறித்து நான் விரிவான திட்டங்களை முன்வைக்கிறேன்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மளமளவென குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28.16 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.47 கோடியாக அதிகரித்துள்ளது.
3. இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27.96 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.19 கோடியாக அதிகரித்துள்ளது.
5. பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.