நாடாளுமன்றத்தில் பணியாற்றும் மூன்றில் 2 பெண்களுக்கு பாலியல் தொல்லை- எங்கு தெரியுமா...?


நாடாளுமன்றத்தில் பணியாற்றும் மூன்றில் 2  பெண்களுக்கு பாலியல் தொல்லை- எங்கு தெரியுமா...?
x
தினத்தந்தி 30 Nov 2021 10:55 AM GMT (Updated: 30 Nov 2021 10:55 AM GMT)

பிரிட்டானி ஹிக்கின்ஸ் மற்றவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்க தூண்டுதலாக இருந்தார்.

சிட்னி,

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெண்களில், மூன்றில் இருவர், பாலியல் தொல்லைகளை அனுபவித்திருப்பதாக, அந்நாட்டின் பாலியல் வன்கொடுமை தடுப்பு ஆணையர் கேட் ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் பெண் எம்.பி.,க்களின் நிலை, ஆபத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற பணியிடங்கள் பாதுகாப்பாகவும் மரியாதைக்குரியதாகவும் இருப்பதை உறுதி செய்வதே இந்த மதிப்பாய்வின் நோக்கமாகும், இது குறைவாக இருப்பதாக  ஜென்கின்ஸ்  கூறி உள்ளார்.

முன்னாள் ஊழியர் பிரிட்டானி ஹிக்கின்ஸ், மற்றவர்கள்  குற்றச்சாட்டுகளை முன்வைக்க தூண்டுதலாக இருந்தார்.  கேட் ஜென்கின்ஸ் ஆய்வறிக்கை குறித்து  முன்னாள் அரசியல் ஊழியர் பிரிட்டானி ஹிக்கின்ஸ் கவலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அலுவலகங்களில் கொடுமைப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து ஆராயப்பட்டது.

தற்போதைய, முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் பணியாளர்களுடன் கிட்டத்தட்ட 500 பேரை பேட்டி கண்டது. அதில்  பங்களித்தவர்களில் பெரும்பாலும் பெண்கள் ஆவார்கள். இந்த பணியிடங்களில் (26 சதவீதம்) ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் ( 40சதவீதம் ) பாலியல் துன்புறுத்தலை அனுபவிக்கின்றனர்.

ஆய்வில்  பங்குபெற்ற  பாதிக்கும் மேற்பட்டவர்கள் (51 சதவீதம் ) கொடுமைப்படுத்துதல், பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு ஒருமுறையாவது பாதிக்கபட்டவர்கள் ஆவார்கள்.

இந்த ஆய்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ஸகாட் மோரிசன், அறிக்கை விவரங்கள், வருத்தத்தை அளிப்பதாக உள்ளது என கூறினார்.

பல்வேறு பாலியல் புகார்கள் எழுந்த நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற பணிச்சூழல் குறித்த, சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு முன்பாக, ஆஸ்திரேலியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய நெருக்கடி, பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு ஏற்பட்டுள்ளது.

Next Story