உலக செய்திகள்

இலங்கையில் அஞ்சலி நிகழ்ச்சி: தமிழ் பத்திரிகையாளர் மீது தாக்குதல்: ராணுவ வீரர்கள் 3 பேர் கைது + "||" + Tamil journalist attacked by Sri Lankan soldiers; 3 arrested

இலங்கையில் அஞ்சலி நிகழ்ச்சி: தமிழ் பத்திரிகையாளர் மீது தாக்குதல்: ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

இலங்கையில் அஞ்சலி நிகழ்ச்சி: தமிழ் பத்திரிகையாளர் மீது தாக்குதல்: ராணுவ வீரர்கள் 3 பேர் கைது
தமிழ் பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பு, 

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துடனான இறுதி யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் படுகொலை கொல்லப்பட்டனர். யுத்தத்தின் கடைசிக்கட்ட களமான முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் கோரக் காட்சிகள் அரங்கேறின.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நவம்பர் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால் அவ்வாறு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கை ராணுவமும், போலீசாரும் அனுமதிப்பது இல்லை. 

இந்நிலையில் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நினைவு அஞ்சலியை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் என்ற தமிழ்ப் பத்திரிகையாளர் மீது அங்கிருந்த ராணுவ வீரர்கள் சிலர் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பத்திரிகையாளர் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இலங்கை ஊடகத்துறை மந்திரி டல்லஸ் அலகப்பெருமாவுக்கு ஊடக ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.

இதற்கிடையில் தமிழ்ப் பத்திரிகையாளர் தாக்கப்பட்டது தொடர்பாக 3 ராணுவ வீரர்களை முல்லைத்தீவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமனம்
இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
2. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
3. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வார்னருக்கு ஓய்வு
பிக்பாஷ் கிரிக்கெட்டில் அசத்திய மெக்டெர்மோட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
4. ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணி அபார வெற்றி
இலங்கை அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
5. இலங்கைக்கு ரூ.18,000 கோடி கடன்: இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்! : டாக்டர் ராமதாஸ் பட்டியல்
இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்திய அரசு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பட்டியலிட்டு உள்ளார்.