உலக செய்திகள்

பிரேசிலிலும் பரவத்தொடங்கிய ‘ஒமிக்ரான்’ வைரஸ்...!! + "||" + Brazil records Latin America's first 2 cases of Omicron variant

பிரேசிலிலும் பரவத்தொடங்கிய ‘ஒமிக்ரான்’ வைரஸ்...!!

பிரேசிலிலும் பரவத்தொடங்கிய ‘ஒமிக்ரான்’ வைரஸ்...!!
லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலிலும் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலியா, 

‘ஒமிக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. 

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமிக்ரான்’ வைரஸ் வேகமாக பரவுகிறது. அதுமட்டும் இன்றி ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் ‘ஒமிக்ரான்’ கால்பதித்து விட்டது. இதன் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ‘ஒமிக்ரான்’ வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் தெற்கு ஆப்பரிக்க நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் ஜப்பான் ஒருபடி மேலே சென்று ஒட்டுமொத்தமாக அனைத்து நாடுகளுக்கும் பயணத்தடை விதித்துள்ளன.

இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் காரணமாக தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு அமெரிக்கா நேற்று முன்தினம் தடை விதித்திருந்தது. 

இந்நிலையில் லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலிலும் இரண்டு நபர்களுக்கு ‘ஒமிக்ரான்’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த இரண்டு பயணிகளுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் என்றும் பிரேசில் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. 5 முதல் 11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பிரேசில் அனுமதி
பிரேசில் அரசு 5-11 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது.
2. பிரேசில் கால்பந்து கதாநாயகன் ரொனால்டோ கொரோனாவால் பாதிப்பு
உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
3. பிரேசிலில் வெள்ளப்பெருக்கு - உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு
பாஹியா மாநிலத்தில் இவ்வளவு மோசமான வெள்ள பாதிப்பு இதுவரை ஏற்பட்டதில்லை என அம்மாநில கவர்னர் ரூயி கோஸ்டா தெரிவித்துள்ளார்.
4. பிரேசில்: லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா பஸ் - 5 பேர் பலி
பிரேசிலில் சுற்றுலா பஸ் மீது லாரி மோதி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
5. "அரசியல் களம் அடிதடியானது" சண்டையிட்டு வேறுபாடுகளை தீர்த்துக் கொண்ட மேயரும் - முன்னாள் கவுன்சிலரும்
பொதுவாக, அரசியல்வாதிகள் காரசார விவாதங்களில் ஈடுபட்டு கொள்வார்கள். ஆனால், இரு அரசியல்வாதிகளுக்கு இடையே உள்ள பிரச்சினை சண்டை மூலம் தீர்த்துக் கொள்ளப்பட்டது இதுவே முதல் முறை எனலாம்.