உலக செய்திகள்

டுவிட்டர் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலின் சம்பளம் இவ்வளவு தானா...! + "||" + Twitter CEO Parag Agrawal to receive $1mn annual salary

டுவிட்டர் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலின் சம்பளம் இவ்வளவு தானா...!

டுவிட்டர் புதிய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலின் சம்பளம் இவ்வளவு தானா...!
அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தில் மேலும் ஒரு இந்தியர் தலைமை பதவியைப் பெற்றுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அமெரிக்கா ,

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தள நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டர் சிஇஓ பதவியில் இருந்து அதன் நிறுவனர் ஜாக் டோர்சி  வெளியேறிய நிலையில் இந்தியரான பராக் அகர்வால் புதிய சிஇஓ -வாக நியமிக்கப்பட்டார் .அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தில் மேலும் ஒரு இந்தியர் தலைமை பதவியைப் பெற்றுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் முன்னணி  ஐடி சேவை நிறுவனத்திலேயே சிஇஓ-க்கள் பல கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெறுகின்றனர்.இந்நிலையில் பராக் அகர்வாலின்  சிஇஓ பதவிக்குக் கிடைக்கும் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது. 

டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் அமர்ந்துள்ள பராக் அகர்வால் தனது வருடாந்திர சம்பளமாக 1 மில்லியன் டாலர்( இந்திய மதிப்பில் ரூ.7. 49 கோடி) தொகையைப் பெற உள்ளார். இதேபோல் 12.5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனப் பங்குகளை 4 வருடங்களுக்கு பெற உள்ளார். 

ஆல்பபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை 281 (இந்திய மதிப்பில் ரூ.2,107 கோடி) மில்லியன் டாலரும், மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா 43 மில்லியன் டாலரும் (இந்திய மதிப்பில் ரூ.322 கோடி),  அடோப் சாந்தனு நாராயண் 39.2 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.292 கோடி) டாலரும்,  அளவிலான சம்பளத்தைப் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவருடன் ஒப்பிடுகையில்  பராக் அகர்வாலின்  சம்பளம் பல பங்கு குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது .