உலக செய்திகள்

நான் ஏன் பிறந்தேன்? டாக்டர் மீது இளம்பெண் வழக்கு + "||" + why was I born? Teen case against Doctor

நான் ஏன் பிறந்தேன்? டாக்டர் மீது இளம்பெண் வழக்கு

நான் ஏன் பிறந்தேன்? டாக்டர் மீது இளம்பெண் வழக்கு
இங்கிலாந்தில் தன்னுடைய பிறப்புக்கு பிரசவம் பார்த்த டாக்டர் மீது இளம்பெண் வழக்கு போட்டுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஐகோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று வந்துள்ளது.  அதில், எவீ டூம்ஸ் (வயது 20) என்ற இளம்பெண் ஒருவர் தன்னுடைய பிறப்புக்கு பிரசவம் பார்த்த டாக்டரான பிலிப் மிட்செல் என்பவருக்கு எதிராக வழக்கு போட்டுள்ளார்.

அந்த வழக்கில், டாக்டர் பிலிப் தன்னுடைய தாயாருக்கு சரியான மருந்துகளை (போலிக் ஆசிட்) பரிந்துரைத்து இருந்தார் என்றால், கர்ப்பம் தள்ளி சென்று, தான் பிறந்திருக்காமல் இருந்திருப்பேன் என தெரிவித்து உள்ளார்.

எவீக்கு முதுகு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு தனது வாழ்நாளில் டியூப் உதவியுடன் கழித்து வரும் நிலையில் உள்ளார்.  அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி ரோசாலிண்ட் கோ, குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.

எவீயின் தாயாருக்கு சரியான அறிவுறுத்தல்களை பிலிப் வழங்கியிருந்தால், கர்ப்பம் தள்ளி சென்றிருக்கும்.  அதன்பின்னர் கர்ப்பம் தரிக்கும்போது ஆரோக்கிமுள்ள குழந்தை பிறந்திருக்கும் என கூறி எவீக்கு இழப்பீடாக பெருந்தொகையை கிடைப்பதற்கான உரிமை உள்ளது என தீர்ப்பில் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, எவீயின் தாயார் கோர்ட்டில் கூறும்போது, நல்ல முறையில் முன்பே சரிவிகித உணவு எடுத்திருந்தால், போலிக் ஆசிட் எடுத்து கொள்ள வேண்டாம் என டாக்டரால் அறிவுறுத்தப்பட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சித்தார்த் மீது ஜதராபாத் போலீஸ் வழக்கு
நடிகர் சித்தார்த் மீதுந டவடிக்கை எடுக்ககோரி மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜதராபாத் சைபர் கிரைம் போலீசில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.
2. 23 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்த ஏழுமலையான் கோவில் வழக்கு
23 ஆண்டுகள் நடந்த வழக்கில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கே 3,402 ஏக்கர் நிலம் சொந்தம் என கோர்ட்டு தீர்ப்பு வந்துள்ளது.
3. அதர்வா படத்தை தடை விதிக்க கோரி வழக்கு
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குருதி ஆட்டம் திரைப்படத்தை தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
4. ஆன்லைன் வழக்கு விசாரணையின்போது இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வக்கீல் நேரில் ஆஜராக வேண்டும்
ஆன்லைன் வழக்கு விசாரணையின்போது பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வக்கீல், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் வருகிற ஜனவரி 20-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் பதிவு செய்த வழக்கு ரத்து - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு
யூ-டியூபர் மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.