உலக செய்திகள்

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவு; 18 பேர் மாயம் + "||" + Floods, landslides in Vietnam; 18 people missed

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவு; 18 பேர் மாயம்

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவு; 18 பேர் மாயம்
வியட்நாம் நாட்டில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 18 பேர் காணாமல் போய் உள்ளனர் என கூறப்படுகிறது.


ஹனோய்,

வியட்நாம் நாட்டின் மத்திய பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அந்நாட்டு மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன.

இதேபோன்று தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளூர் சாலைகள் பகுதியளவு பாதிப்படைந்து உள்ளன.  போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.  வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வெள்ளத்தில் 18 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களில் பலர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதுவரை பெய்துள்ள மழையில் 780 ஹெக்டர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.  எனினும் காபி தோட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 378 பேர் பலியானார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. கொலம்பியாவில் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு; 11 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்த சோகம்
கொலம்பியாவில் கனமழையால் தங்க சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 11 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்து உள்ளனர்.
2. பிரேசிலில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
3. கேரளா: நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
நிலச்சரிவில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளனர்
4. பிரேசிலில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு
பிரேசிலில் கடுமையான வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்து உள்ளது.
5. இமாசல பிரதேசம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு; தொழிலாளர் உயிரிழப்பு
இமாசல பிரதேசத்தில் கட்டுமான பணியில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.