உலக செய்திகள்

இம்ரான்கானுக்கு எதிராக பாகிஸ்தான் தூதரகம் பதிவிட்ட விவகாரம்: டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் + "||" + Tweets from Pak embassy in Serbia criticise PM Khan, allege non-payment of salaries; FO says account hacked

இம்ரான்கானுக்கு எதிராக பாகிஸ்தான் தூதரகம் பதிவிட்ட விவகாரம்: டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம்

இம்ரான்கானுக்கு எதிராக பாகிஸ்தான் தூதரகம் பதிவிட்ட விவகாரம்: டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம்
பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பிய இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
பல்ஹிரேட்,

சம்பளம் இல்லாமல் உங்களுக்கு எவ்வளவு நாள் வேலை செய்வது? என செர்பியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் இம்ரான்கானுக்கு கேள்வி எழுப்பி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது தொடர்பாக, செர்பியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள பதிவில், பணவீக்கம் புதிய உச்சத்தை அடைந்துள்ளபோது, அரசு ஊழியர்களான நாங்கள் எவ்வளவு நாட்கள் அமைதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?.

இம்ரான்கான் (பாக்.பிரதமர்) உங்களுக்காக நாங்கள் கடந்த 3 மாதங்களாக சம்பளம் இல்லாமல் வெலை செய்துகொண்டிருக்கிறோம். கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் எங்கள் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இது தான் புதிய பாகிஸ்தானா? என்னை மன்னித்துவிடுங்கள் இம்ரான்கான். எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பிய இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தான் தூதரக டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  

டுவிட்டர் மட்டும் அல்லாமல் பேஸ்புக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கணக்குகளில் இருந்து வரும் பதிவுகள் பாகிஸ்தான் தூதரகத்தின் கருத்து இல்லை எனவும் வெளியுறவு அமைச்சம் விளக்கம் அளித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்!
பாகிஸ்தான் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார் ஆயிஷா மாலிக்.
2. காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பறந்து வந்த பலூன்
ல்லை தாண்டும் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பாகிஸ்தான், இதுபோன்று தங்கள் நாட்டு கொடியுடன் இந்திய பகுதிக்குள் பலூன்களை அனுப்புவது வழக்கமாக உள்ளது
3. பாகிஸ்தானில் மோர்டார் குண்டுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள முகாம் ஒன்றில் பழைய மோர்டார் ரக குண்டுகள் திடீரென வெடித்து சிதறியது.
4. பாகிஸ்தான்: நபிகள் குறித்து அவதூறு பரப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை
பாகிஸ்தானில் தனது தோழிக்கு நபிகள் பற்றிய அவதூறான கேலிச்சித்திரங்களை அனுப்பிய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
5. இம்ரான்கான் கட்சியின் நிதி மோசடி: தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு
தேர்தல் கமிஷன், மனுதாரருக்கு ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டு இருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.