பறக்கும் விமானத்தில் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்; பயணிகள் அலறல்


பறக்கும் விமானத்தில் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்; பயணிகள் அலறல்
x
தினத்தந்தி 3 Dec 2021 12:01 PM GMT (Updated: 3 Dec 2021 12:30 PM GMT)

விமான பணிப்பெண்கள் வந்து பால் கொடுக்க வேண்டாம் என தெரிவித்த போதிலும் அந்தப் பெண் மதிக்காமல் தனது வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.

நியூயார்க்,

அமெரிக்காவின் புகழ்பெற்ற டெல்டா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நியூயார்க் மாகாணத்தின் சைராகியூஸ் நகரில் இருந்து ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிற்கு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென தான் துணியில் மூடி வைத்திருந்த செல்லப்பிராணியான பூனைக்கு தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். அந்தப் பெண்ணின் செயலால் பூனை ஆக்ரோஷமாக கத்தியிருக்கிறது.

பூனையின் சத்தம் அதிகரித்ததால் அதிருப்தியடைந்த சக பயணிகள் தாய்பால் கொடுக்க வேண்டாம் என அப்பெண்ணிடம் கூறியிருக்கின்றனர். இருப்பினும் பயணிகளின் பேச்சை மதிக்காத அப்பெண் தனது செயலை தொடரவே, பயணிகள் விமான சிப்பந்திகளிடம் புகார் அளித்தனர். விமான பணிப்பெண்கள் வந்து பால் கொடுக்க வேண்டாம் என தெரிவித்த போதிலும் அந்தப் பெண் மதிக்காமல் தனது வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.

இதனையடுத்து விமானிகளிடம் இது குறித்து கூறப்பட்டது. விமானிகள், தரைக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் அமைப்பின் மூலம்  பெண்ணின் செயல் குறித்து புகார் அளித்திருக்கின்றனர். அந்த விமானம் அட்லாண்டா விமான நிலையத்தை அடைந்தபின்னர் அந்த பெண்மணி தனியாக அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

ஒரு பூனை விஷயத்திற்காக விமானிகள் தரைக்கட்டுப்பாட்டு பிரிவினரிடம் புகார் தெரிவித்த விவகாரம் வியப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் விமானத்தில் அந்த பெண், முடியில்லாத பூனையை துணியால் சுற்றிவைத்திருந்தது ஒரு குழந்தை போல சக பயணிகளுக்கு தெரிந்ததாக அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்தார்.

Next Story