கொலம்பியாவில் இருந்து கடத்த முயன்ற அரிய வகை உயிரினங்கள்; போலீசார் பறிமுதல்


கொலம்பியாவில் இருந்து கடத்த முயன்ற அரிய வகை உயிரினங்கள்; போலீசார் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Dec 2021 1:42 PM GMT (Updated: 3 Dec 2021 1:42 PM GMT)

கொலம்பியாவில் இருந்து ஜெர்மனிக்கு கடத்த முயன்ற அரிய வகை சிலந்திகள், கரப்பான் பூச்சிகள், தேள்கள் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.


பொகோட்டா,

கொலம்பியா நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு கடத்துவதற்காக இருந்த 210 பிளாஸ்டிக் டப்பாக்களை பொகோட்டா நகரில் உள்ள எல் டோரடோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில், அந்த டப்பாக்களில் அடைக்கப்பட்டு இருந்த 232 டிராண்டுலா வகை சிலந்திகள், சிலந்தி முட்டைகள், தேள்கள், 67 கரப்பான் பூச்சிகளை இருவர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்த முயன்றுள்ளனர். இரு ஜெர்மானியர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த அரியவகை ஊர்வன ஜீவராசிகளை பறிமுதல் செய்தனர்.

10 ஆயிரத்திற்கு அதிகமான பன்முகத்தன்மை கொண்ட உயிரினங்களை உடைய கொலம்பியாவில் ஜீவராசிகள் கடத்தல் பெரும் தொழிலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பரில், கொலம்பியாவில் இருந்து ஹாங்காங் நாட்டுக்கு சட்டவிரோத வகையில் கடத்தப்பட இருந்த சுறா மீன்களின் 3,493 துடுப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். 


Next Story