உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: பெண்களை கட்டாய திருமணம் செய்ய தடை - தலீபான்கள் அறிவிப்பு + "||" + Taliban bans forced marriage of women in Afghanistan

ஆப்கானிஸ்தான்: பெண்களை கட்டாய திருமணம் செய்ய தடை - தலீபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான்: பெண்களை கட்டாய திருமணம் செய்ய தடை - தலீபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் பெண்களை கட்டாய திருமணம் செய்ய தலீபான்கள் அமைப்பு தடை விதித்துள்ளது.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான் பயங்கரவாத அமைப்பின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. 

பெண்கள் உயர்கல்வி கற்பது, பெண்களின் ஆடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்துள்ளது. இதனால், ஆப்கானிஸ்தானின் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யும் நடைமுறையில் இருந்து வந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய தலீபான்கள் அமைப்பு தடை விதித்துள்ளது. பெண்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யக்கூடாது. கணவன் உயிரிழந்தால் அவரது விதவை மனைவிக்கு கணவரின் சொத்தில் பங்கு உள்ளது’ என தலீபான்கள் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளை நீதிமன்றங்கள் கவனத்தில் உள்ள வேண்டும் என்று தலீபான்கள் செய்தித்தொடர்பாளர் ஷபிஹுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் விரிவடைவதை தடுக்க வேண்டும்: ஐ.நா
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் விரிவடைவதை தடுக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ கட்டர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. ஆப்கானிஸ்தானில் அனைத்து வகுப்பு மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அனுமதி - தலீபான்கள்
ஆப்கானிஸ்தானில் மார்ச் 21 முதல் அனைத்து மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
3. ஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு: 42 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவின் காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
4. ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம் ; நார்வேயிடம் தலீபான்கள் பேச்சுவார்த்தை
கடும் பஞ்சத்தால் ஆப்கானிஸ்தான் தத்தளிக்கும் நிலையில், தங்களுக்கு உதவுமாறு நார்வே நாட்டிடம் தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
5. நெதர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள்: 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி
நெதர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.