உலக செய்திகள்

தடை செய்யப்பட்ட சினிமாவை 5 நிமிடங்கள் பார்த்த மாணவருக்கு 14 ஆண்டுகள் சிறை + "||" + In North Korea, Teen Gets 14 Years in Jail For Watching 5 Mins Of Banned Film

தடை செய்யப்பட்ட சினிமாவை 5 நிமிடங்கள் பார்த்த மாணவருக்கு 14 ஆண்டுகள் சிறை

தடை செய்யப்பட்ட சினிமாவை 5 நிமிடங்கள் பார்த்த மாணவருக்கு 14 ஆண்டுகள் சிறை
தென் கொரிய சினிமாவை 5 நிமிடங்கள் பார்த்ததற்காக வடகொரிய 14 வயது மாணவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
சியோல்

தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற ‘விரோத’ நாடுகளில் இருந்து வரும் அனைத்து கலாச்சார பொருட்களும் வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.தென் கொரிய சினிமாவான  ‘தி அங்கிள்’ படத்தை 5 நிமிடங்கள் பார்த்ததற்காக யாங்காங் மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது மாணவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 

ஹைசன் சிட்டியின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கூடத்தில்  அந்த மாணவர் சினிமாவை பார்த்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்  இது குறித்து  ஒரு உள்ளூர்  செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

தென் கொரிய திரைப்படங்கள், பதிவுகள், தொகுப்புகள், புத்தகங்கள், பாடல்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை நேரடியாகப் பார்த்த, கேட்ட, அல்லது வைத்திருப்பவர்களுக்கு ' ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 15 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும்.

முன்னதாக, பிரபல நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியான ஸ்க்விட் கேமைப் பார்த்து வடகொரியாவில் மாணவர்கள் பிடிபட்டதால் கடுமையான தண்டனை பெற்றதாக அமெரிக்க செய்தி ஊடகமான ரேடியோ பிரீ ஏசியா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. வடகொரியா நிறுவன தலைவரின் இளைய சகோதரர் கிம் யோங் ஜூ காலமானார்
வடகொரியாவை நிறுவிய தலைவரான கிம் இல் சுங் என்பவரின் இளையசகோதரரான கிம் யோங் ஜூ காலமானார்.
2. தமிழில் ஸ்க்விட் கேமை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்...!
தென் கொரியாவில் தயாரான ஸ்க்விட் கேம் வெப் தொடரை நெட்பிளிக்ஸ் தமிழ், தெலுங்கில் 'டப்' செய்து வெளியிட்டுள்ளது.
3. வடகொரியா: ஸ்க்விட் கேம் விற்பனை செய்தவருக்கு மரண தண்டனை; வாங்கிய மாணவனுக்கு ஆயுள் தண்டனை
நெட்பிளிக்ஸின் ஸ்க்விட் கேமை விற்ற வட கொரிய நபருக்கு மரண தண்டனையும், வாங்கிய மாணவனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.
4. 35 நாட்களுக்கு பிறகு பொதுவெளியில் தோன்றிய கிம் ஜாங் உன்
சீனாவுடனான எல்லைக்கு அருகில் கட்டப்பட்டு வரும் புதிய நகரத்தை கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.
5. அணு உலையை மீண்டும் இயக்க‌ தொடங்கிய வடகொரியா!
அணு ஆயுதங்களை தயாரிப்பதற்காக வடகொரியா மீண்டும் அணு உலையை இயக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது அமெரிக்காவுக்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளது.