இங்கிலாந்தில் சமூக பரவலான ஒமைக்ரான் பாதிப்பு; சுகாதார மந்திரி அதிர்ச்சி


இங்கிலாந்தில் சமூக பரவலான ஒமைக்ரான் பாதிப்பு; சுகாதார மந்திரி அதிர்ச்சி
x
தினத்தந்தி 7 Dec 2021 1:00 PM GMT (Updated: 7 Dec 2021 1:00 PM GMT)

இங்கிலாந்தில் ஒமைக்ரான் பாதிப்பு சமூக பரவலாகி உள்ளது என அந்நாட்டு சுகாதார மந்திரி அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.




லண்டன்,

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் பாதிப்பு இங்கிலாந்து உள்பட மொத்தம் 38க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.  இதனால், தென் ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இங்கிலாந்து அரசு விதித்துள்ளது.

இங்கிலாந்தில், நேற்று வரை 160 பேர் ஒமைக்ரானுக்கு பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு மிக தீவிரமுடன் பரவி வருகிறது.  அதனை கட்டுப்படுத்த போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், அந்நாட்டு சுகாதார மந்திரி சாஜித் ஜாவித் நாடாளுமன்றத்தில் பேசும்போது, இங்கிலாந்தில் 261 பேருக்கு, ஸ்காட்லாந்தில் 71 பேருக்கு வேல்சில் 4 பேர் என மொத்தம் 336 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சர்வதேச பயணிகளுடன் இவர்களுக்கு தொடர்பு எதுவும் இல்லை.  அதனால், இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் சமூக பரவல் ஏற்பட்டு உள்ளது என்ற முடிவுக்கு நாம் வந்துள்ளோம் என கூறியுள்ளார்.


Next Story