உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை...! + "||" + 45-year-old Indian-origin gas station owner shot dead in the US

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை...!

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை...!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வாஷிங்டன், 

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கிழக்கு கொலம்பஸ் நகரில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையத்தை நடத்தி வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் குமார் படேல்.

45 வயதான இவர் நேற்று முன்தினம் காலை வங்கியில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக தனது கியாஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்றார்.

இதனை அறிந்து அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர், அமித் குமார் வங்கிக்குள் நுழைவதற்கு முன் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அதன்பின்னர் அந்த மர்ம நபர் அமித் குமார் வங்கியில் டெபாசிட் செய்ய வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: கொரோனாவால் 2 ஆயிரத்தை கடந்த தினசரி இறப்பு எண்ணிக்கை
ஒவ்வொரு நாளும் சராசரியாக தற்போது 2 ஆயிரம் பேர் கொரோனாவால் அங்கு இறக்கிறார்கள்.
2. அமெரிக்காவில் தடுமாறும் தடுப்பூசி திட்டம்..! போதிய மக்கள் ஆதரவு இல்லை
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு போதிய மக்கள் ஆதரவு இல்லாததால், தடுப்பூசி இயக்கம் மந்தமாக உள்ளது.
3. பண வீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை ஒருமையில் திட்டிய அமெரிக்க அதிபர்
பண வீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒருமையில் திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
4. தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்து - 7 வீரர்கள் காயம்
தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.
5. அமெரிக்கா: இரவு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி
அமெரிக்காவில் இரவு விருந்து நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.