உலக செய்திகள்

ஒமைக்ரான் வைரஸ் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது: உலக சுகாதார அமைப்பு + "||" + No Indication Omicron Causes More Severe Disease Than Delta, Says WHO

ஒமைக்ரான் வைரஸ் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது: உலக சுகாதார அமைப்பு

ஒமைக்ரான் வைரஸ் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது: உலக சுகாதார அமைப்பு
ஒமைக்ரான் வைரஸ் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ஜெனீவா

‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து பல நாடுகளும் அச்சத்திலேயே உள்ளது

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கடுமையான நோயை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசர கால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறும்போது,  "முந்தைய கொரோனா வகைகளை விட ஓமைக்ரான் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.நம்மிடம் மிகவும் பயனுள்ள தடுப்பூசிகள் உள்ளன, அவை தற்போதுள்ள அனைத்து வகைகளுக்கும் எதிராக செயல்பட்டு நோயின் தீவிரத்தை கட்டுபடுத்தியுள்ளது. ஒமைக்ரான் குறித்து மேலும் ஆரய்ச்சி தேவை" என்று அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசி; சோதனையை தொடங்கிய மாடர்னா நிறுவனம்!
ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக செயல்படும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் சோதனையை மாடர்னா நிறுவனம் தொடங்கியது.
2. இந்தியாவில் ஒமைக்ரன் சமூக பரவலாகிவிட்டது - சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அமைப்பு தகவல்
நாட்டில் ஒமைக்ரான் சமூக பரவல் ஆகி விட்டதாக மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
3. ஒமைக்ரானின் புதிய வடிவத்தை அறிவித்தது இங்கிலாந்து; 400- க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரானின் புதிய வடிவம் அறிவிக்கப்பட்டிருப்பது, கொரோனா எப்போது ஒழியப்போகிறது என்ற கேள்வியை ஏற்படுத்தி உள்ளது.
4. ஒமைக்ரான் எதிரொலி: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து கிரிக்கெட் தொடர் தள்ளிவைப்பு
10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியுள்ளதால், தள்ளிவைக்கப்படுகிறது.
5. ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தார் விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷாலுக்கு சமீபத்தில் கொரோனா ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டு அதில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.